பதிவுகள்

unakaga eluthugiren

எனக்கும் எழுத பிடிக்கவில்லை

உன்னை  எண்ணி ஏக்கத்தில் எழுத

எழுதுகிறேன்  உனக்காக......................

வருந்துகிறேன்  நீ படிக்காமல் போனால்

என் எழுத்துகளில் பிழைகள் இருக்கலாம்

நீ  பிழை காண மாட்டாய் என்னிடம்

உன்னை எண்ணி எழுதுகையில்

நிறுத்தம் தெரியவில்லை என் கைகளுக்கு

மனம் யோசிக்கிறது மிகை இல்லாமல்

அவ்வளவு சிரபானவள் நீ எனக்கு

சிறப்புக்கள் வந்து சேரும் என்னாலும்................

தலைப்பு இல்லை எனக்கு

என்னிடம் பேச மறந்த உன் மனம்

என்னை  மறந்திருக்கும்

உன்னிடம்  பேச துடித்த என் மனம்

உன்னை மறக்கவில்லை

சற்றே நாட்கள் நீ காட்டிய அன்பு

என் வாழ்நாள் வரை என்னிடம் இருக்கும்

என்னிடம் இருந்த சிறு அன்பையும்

உன்னிடம் கொடுத்துவிட்டேன்

என் அன்பு வேறு யாவருக்கும் இல்லாமல் போனது

எல்லாம் நீ காட்டிய அன்பால் தான் .........

kathaiyaagi pona natpu

உன் நட்பு ஒரு தொடர் கதை

அதை எழுதியவன் நான் 

அதில் கதையாகி போனவள் நீ 

ஒரு ஒரு வரிகளும்  உருவாகின 

உன்னை எண்ணி மனங்களை உருக செய்ய

சிரிபொலி கேட்கும் காட்சிகள் அதிகம்

துயர் துடைக்கும் நிமிடங்கள் அதிகம்

தோள் சாய்ந்த துயரங்கள் குறைவு 

பரிமாறிய அன்பிற்கு கணக்கில்லை 

உன் பாசத்திற்கும் குறைவில்லை 

கதைக்கு முடிவு வேண்டும் என்பதாலா

நம் நட்பும் பிரிந்தது , புத்தகம் உருவாகியது

வெளிவந்த புத்தகமே நம் நட்பின் சாட்சி ..............

pirivu

ஏனோ மயக்கம் இதயத்தில்

ஏனோ துயரம் மனதில்

ஏனோ புரியவில்லை எனக்கும்

எல்லாம் உன் பிரிவால் தானோ

காதல் பிரிவை விட

உன் நட்பின் பிரிவை

கடினமாய் உணருகிறேன் .........

sontham

சொந்தங்கள் ஏதும் இல்லை
சொந்தம் சொல்லி வந்தாய்
உன் அன்பால் கை கொடுத்தாய்
ரசிகையாய் ரசித்தாய் ....
துக்கங்களை பகிர்ந்தாய் .....
மகிழ்ச்சியை கொண்டடினாய்
என்னுள் தீபம் ஏற்றினாய் ....
எல்லாம் செய்தாய் .எனக்காக
உன்னை அறியாமல்
உன் அன்பு மட்டும் கடல் போலே
போதும் என மகிழ்ந்தேன்
எதிர்பாரத வேளைகள் வந்தன எதனாலோ ?
எங்கே போனாய் தெரியவில்லை ?
என்று வருவாய் ...........? தெரியவில்லை

தனிமை

தனிமை துணை கொடுக்கிறது
தனிமையில்  வாடுகிறேன்



un varugai

enaku piditha idamithu
unakum piditha idamithu
enakaga nee varum ore idamithu
en manam elugirathu
un varugai neram teriyavillai
un ennangal puriyavillai
un varugaiyaal inge
unnalam arigiren
en nalam nee epadi arigiraai
athuvum enaku teriyavillai
nee varatha velaigal
thunbangal varum velaigal
un varugaiyaal kondatam enaku
manam thullugirathu enaku

sila neram nam varugai
ontru koodugirathu inge
irunthum unnidam pesa
mudivathillai enaku
irunthum magilchi adaigiren
un varugaiyaal nane
thinamum un varugaiku
kathirukiren nane ....
-enuirukaga

தோழியே

தோழியே  நீ வான் அருகில்
தூரத்தில் நான் உன் அருகில்
இருப்பதாய்  எண்ணம்

கண்கள் தூங்கும் நேரம்
முகில் தேடி அலைகிறது
மனம் தூங்கவில்லை  

வானம் தொடும் உன் நட்புக்கு
வானமே பதில் கூறும்
ஆஹாயம் சாட்சி 

மேகம் பயணிக்கும் உன்  நியாபகம்
தினம் என் கண்ணீர் துளி
மழையில் நனைகிறது  

நெஞ்சம் மறக்காது உன்னை
வேதனைகள்  வந்தாலும்
எபோதும்  சிந்தனையில் நீ .............

pirivu

வாழ்வின் வேதனைகள் புதிதல்ல

உன் பிரிவின் வேதனைகள் புதிது .........

தனிமைகள் புதிதல்ல

நீ இல்லாத தனிமைகள் புதிது .........

உலகம் புதிதாகிறது என் மறைவால் ....

உன் நட்புகாக

உன் நட்பை பிரியும் நேரம்
என் உயிரை  பிரிய எண்ணம்

உன் அன்பு காட்டும் வழியில்
என்றும் சென்றிடுவேன்  நட்போடு

வழித்துணை யாரும் இல்லை
உன் அன்பு  எனக்கு துணை

சில மாத பிரிவுகள் கூட 
உன்னை பிரிக்கிறது என்னிடம் 

பிரிந்த வேளைகள் சிந்தனையிலே
ஒரே மயக்கம் கண்மூடினால்
 
என்று வரும் அந்த நாள்
இன்றே வர காத்திருக்கிறேன் 

உன் நட்புகாக .........

தீபம்

 உன்னிடம்  இத்தனை மகிழ்ச்சிகள்

எல்லாம் நாம்  இருவரும்

நட்போடு சந்தித்ததாலோ

மனதிற்குள் திருவிழா

அதனுள் தீபமாய் நீ

எபோதும்  என்னுள் நீ

அணையா தீபமாய் இருப்பாயா

இடம் தா

வாசல் திறக்கவில்லை இதயத்தில்

இதயமே எனகோர் இடம் தா

மனம் என்னும் திண்ணையில் நான் இருக்க ....

தமிழ்

தமிழே உன்னை நேசிக்க
அன்பை  கற்று  கொண்டேன்
உன் எழுத்துகளை வடிவம் ஆகி
உனக்கு கவிதை வடித்தேன்
உன் வார்த்தைகளை உச்சரித்து
பிறரிடம் தமிழில் உரையாடினேன்
உன்னை உச்சரிக்க உள்ளம் பூரித்தது

நட்பு

எந்நாளும் உன் நட்பு 
எபோதும் என் மனதில்!
இடைவிடாத ஏக்கம்
அன்போடு  என் மனதில்!
உன் கரையிலா நட்பு 
என் கரையோடு போகாது  ........
நீ சிறைவைத்த நட்பு
என்றும் விடுதலை அடையாது .........
உன் உயிரில் கலந்த நட்பு
என் உயிரோடு புவியோடு எழும்  ........
உன் உறவோடு வந்த நட்பு
நம் உறவாக நிலைக்கும் ......
உன் சுவாச காற்றில் கலந்த நட்பு
எபோதும் என் சுவாசத்தில் ..........
உன் நெஞ்சில் நிறைந்த நட்பு
என் இதயமாய் துடிக்கும் .........
உன் முகம் மலர்ந்த நட்பு
என் கண்ணில் மலராக மலரும் ..............
உன் உண்மைக்கு  ஈடான நட்பு
எங்கும் உதயம் பெரும் ..........
உன் கைகொடுத்த நட்பு
என் கைவிட்டு போகாது .....
உன் நிழல் தாங்கிய நட்பு
நிழலை உன்னை பின்தொடரும் ....

பிரிவு

தொலை தூரம் பிரிந்து இருந்தாலும்

தினம் உன் குரல் கேட்டு 
உன்னுடன் இருப்பதாய் உணர்வு 
உன் குரல் கேட்காத  வேளையில் 
புரியாத ஒரு தவிப்பு   

நொடி பொழுதும் உனது அன்பு
எல்லா பொழுதும் என் தேடல்கள்      

உன் ஆறுதல் வார்த்தைகள் தான் உணவு
தினம் ஒரு உண்ணாவிரதம் 

உன் கனவுகள் தான் எனக்கு இரவு
உன் நினைவுகள் தான் எனக்கு  உறக்கம்
பகல்  இரவானது இரவு பகலாகவில்லை

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு