பதிவுகள்

வரம்


எனக்கு வரமாக வந்தவளே என் அன்பு தோழியே

நீ வரும் முன் என் வாழ்க்கையில் இலை உதிர் காலம்......

வந்தபின் பூக்கள் பூக்கும் விண்ணை முட்டும் இயற்கை விந்தை யாக மாறினேன்

அன்பு


உன்னிடம் கொடுபதற்கு என் அன்பை தவிர ஒன்றும் இல்லை என்னிடம்

சிறுவயதில்


அன்று என் சிறுவயதில் எனக்காக யாருமே இல்லை என்று உணர்ந்தேன்

இன்று நீ உணர்த்தினாய் என் தோழியே 

நான் உன்னுடன் இருக்கிறேன் என்று 
  

தனிமை


 யாரிடமும் நான் பேசவில்லை அன்று

உன்னிடம் பேச கூட எனக்கு வார்த்தைகள் வரவில்லை

இருந்தும் பேச துடித்தது என் உள்மனது

கண்களை மூடி என் இதயத்தில் இருக்கும் உன் நினைவுகளை

உணர்ந்தேன்

பொய்யாக கூட என்னால் சிரிக்கமுடியவில்லை அன்று

தனிமை விடைகுடுக்கும் என்று எண்ணினேன் 

அபோது உணர்ந்தேன் நான் தனிமெயில் இல்லை 

என்னோடு நீ இருகிறாய் என்று  

நான் உன் அருகில் இல்லை உன் வேதனைகளை பகிர்வதற்கு

சும்மா இருந்த என்னை

சும்மா இருந்த என் மனதை துள்ளி எழ வைத்தாய் 

நீ மட்டும் அமைதியும் , அன்புமாய் என்னை கண்டாய்

என் மகிழ்ச்சியை கண்டு ரசித்தாய்

உன் மகிழ்ச்சியை நான் என்று கண்டு ரசிபெனோ

வரம் தருவாயா என் அன்பு தோழியே .....?


வண்ணமாகினாய்


இருளை மட்டுமே கண்டன என் கண்கள்

உன்னை கண்ட பின் என் கண்கள்  ...நெகிழ்ந்தன

வண்ண நிறங்களை பார்க்க வைத்தாய்

என் வாழ்வை வண்ண மயமாகினாய் 

உன்னால் மட்டும் எப்படி ...?

 



கண்ணீர்


மழை துளி என் கைகளை தழுவியது

உன் அன்பு என் மனதை தழுவியது

சாரல் காற்று என் முகம் தழுவியது

உந்தன் குரல் என் காதில் இசை தழுவியது

உந்தன் பிரிவு என்னை தழுவியது

என் கண்கள் நனைகிறது

மழையாகிய உன் கண்ணீர் துளியால் ............




நான் என்ன செய்வது ...?


உன்னையும்  என்னையும் பிரித்து
எனக்கு ஒரு துணை கொடுத்தது
உனக்கு ஈடு தான் இருந்தும்
என் அருமை தோழியே நீ என்னை அறிந்து  கொள்வாய்
ஆனால் வருந்துகிறேன்
என்னை நேசிக்க வந்தவள் 
நீ என்மீது வைத்திருக்கும் உண்மை அன்பை புரிந்துகொள்ள மாட்டாள்
என்பதற்க்காக
   

மறந்துவிடுகிறேன்


எனக்கு தோள் கொடுக்க நீ இருந்தும் ...

மறந்துவிட்டேன் நான் ....

உன் நியாபகம் தான் எனக்கு இல்லாமல் போய்விட்டதோ 

என் அன்பு தான் நிழலாகி விட்டதா.....

இருந்திருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டேனோ

என் லட்சியம் அடையும் பாதயில் மறந்துவிடுகிறேன்

தள்ளாடி நடக்கிறேன் ...

உன் உருதுனைக்கு ஒரு குறையும் இல்லை

இருந்தும் தோல்வி அடைகிறேன் ...
உன் நினைவுகளுடன் ஆகாயம் பார்த்தேன்...

இழக்கிறேன்........


அன்று ஒருநாள் நான் உன்னை மிகவும் இழக்கிறேன் என்று கண்ணீருடன்

 உன் வார்த்தைகளால் சொல்ல முடியாமல்

மெல்லிய குரலில் சொல்லிய வார்த்தைகள் 

 இன்னும் என் காதில் ஒலிக்கிறது 

நான் உன்னை எபொழுதும்   இழக்கவில்லை   ...

நீ மட்டும் அவாறு என்னுவது தான் எதனால்.........?  

மழலை




என் மழலை என்னிடம் திரும்ப வந்துவிட்டு
உன் குழந்தை தனமான பேச்சு,
செல்லமாக நீ பேசும் வார்த்தைகள்,
உன் குறும்பன முக பாவனைகள் ,
உன் பேசிலே இருந்த அறியாமை
கண் சிமிட்டும் பார்வைகள் சிரிப்புடன்

செரியா இல்லை தவரா...?





என் அன்பு தோழியே நீ என்னிடம் வைத்துள்ள அன்பை காட்டிலும்

சிறந்தது என் தாய்  என் மீது காட்டும்  அன்பு மட்டுமே

இருபினும் உன் அன்பு

என்னை உன்னிடமே அதிகம் அன்பு காட்ட வைக்கிறது

இது செரியா இல்லை தவரா...?

 உன் பதில் தான் என்னவோ என் அன்பு தோழியே......?

உன் முகம் பார்க்க

தினமும்  காலை இல் உன்னை
காண ஏங்குகிறேன்
ஆனால் என் மனதிலே படிந்திருக்கும்
உன் நினைவுகளை கண்டு
உன் முகத்தை மறந்து
உன் நினைவுகளை சுவாசிக்கிறேன்...

நீ இல்லாமல்

எனக்கு துன்பம் வரும் வெளைலே

 உன்னுடன் இருக்க நினைக்கிறன் உன் நிழலிலே

ஆனால் நான் இருபத்தோ வெகு தொலைவிலே

என் மனசு மட்டும் எகத்திலே

கண்ணை மூடி உன்னை நினைக்கயிலே
  
உன் அன்பை மட்டும் உணர முடிந்தது

என் அருகிலே நீ இருபது போல்

கண் விழித்தேன் நீ இல்லை

உன் அன்பு மட்டும் என்னிடம் இருக்கிறது.....
கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு